Dkn_Daily_News_May_2018__568310022355

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி ஜப்பானை வீழ்த்தியது இந்தியா: நவ்னீத் கவுர் ஹாட்ரிக் அசத்தல்

டாங்கே: தென் கொரியாவில் நடைபெறும் 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை அபாரமாக வென்றது. சன்ரைஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், தொடக்கம் முதலே துடிப்புடன் விளையாடி ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு நவ்னீத் கவுர் 7வது நிமிடத்திலேயே கோல் அடித்து 1-0 என முன்னிலை ஏற்படுத்தினார். அடுத்து 25வது நிமிடத்தில் நவ்னீத் மேலும் ஒரு கோல் அடிக்க 2-0 என முன்னிலை அதிகரித்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணிக்கு அனுபா பர்லா 53வது நிமிடத்திலும், நவ்னீத் கவுர்  55வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.ஜப்பான் அணிக்கு அகி யாமடா 58வது நிமிடத்தில் ஆறுதல் கோல் போட்டார். ஆட்ட நேர முடிவில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஹாட்ரிக் கோல் போட்ட நவ்னீத் கவுர் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீன அணியை 16ம் தேதி எதிர்கொள்கிறது. மற்றொரு போட்டியில் தென் கொரியா 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது.

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி ஜப்பானை வீழ்த்தியது இந்தியா: நவ்னீத் கவுர் ஹாட்ரிக் அசத்தல்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=401672http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |14 May 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *