TODAY NEWS
Search

மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுப்பேன் அரசியலுக்கு நான் வரமாட்டேன்: பிரகாஷ்ராஜ் பேட்டி

,

பெங்களூரு: மக்கள் பிரச்னைகளுக்கு  குரல் கொடுப்பேன். நான் எந்த கட்சிக்கும்  சொந்தமானவன் அல்ல, அதே நேரத்தில் அரசியலில் குதிக்கவும் மாட்டேன் என நடிகர்  பிரகாஷ்ராஜ் கூறினார். பெங்களூரு பிரஸ் கிளப்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் பேசியதாவது: நாட்டில்  வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இதை அரசியல்வாதிகள் மறக்கக் கூடாது.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்  போடுகிறது. தற்போது கர்நாடக மாநிலத்தில் சட்டபேரவைக்கு தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டுள்ளதால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது போல் நாடகமாடி  மக்களிடம் வாக்கு பெற முயற்சித்து வருகிறது. அதே போல் தமிழகத்துக்கு  பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. மத்தியில்  பா.ஜ. கட்சியின் ஆட்சி அமைத்த பின் ஒரு சில அமைச்சர்கள் நாட்டில் கலவரத்தை  ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இவர்களின்  தவறான போக்கினால் நாட்டில் பிரிவினை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல்  தலித், சிறுபான்மையினர் மக்கள் மீது அடக்கு முறை, தாக்குதல் நடைபெற்று  வருகிறது. இதனால் பா.ஜ. கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என தெரிவித்து  வருகிறேன். நான் எந்த கட்சிக்கும் சொந்தமானவன் கிடையாது. அதேபோல் நான்  அரசியலுக்கு வரவும் மாட்டேன்.  மக்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க  மறக்க மாட்டேன் என்றார்.

,

Advertisement