TODAY NEWS
Search

மசூதிக்கு வெளியே காவி உடையில் ஏஏபி தொண்டர்கள் கோஷம் : மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

,

புதுடெல்லி:மத்திய பாஜ ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது, தலித்கள் தாக்கப்படுவது என பல்வேறு பிரச்னை தொடர்ச்சியாக நடந்து வருவதால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பாஜ ஆளும் மாநிலங்களான உ.பியில் உன்னவ் பகுதியில் 17 வயது சிறுமி பலாத்காரம் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கத்வா இடத்தில் 8 வயது சிறுமி கும்பல் பலாத்காரத்துக்கு ஆளானது உள்ளிட்ட இரு சம்பவங்களும் பாஜவுக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்த சூழலில் ராம நவமி ஊர்வலத்தின் போது, காவி தலைப்பாகையுடன் வாள் ஏந்தியபடி சிலர் மசூதிக்கு முன் மத கலவரத்தை தூண்டும் வகையில் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பாஜ அதற்கு தங்கள் பொறுப்பல்லை, ஆம் ஆத்மி தொண்டர்கள் சிலர் தான் இந்த கலவர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், டெல்லி பாஜ தலைவர் மனோஜ் திவாரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அப்போது திவாரி கூறியதாவது: ராம நவமி ஊர்வலத்தின் போது, ஆம் ஆத்மி தொண்டர்கள் 5 பேர், காவி தலைப்பாகை அணிந்து கையில் வாள் ஏந்தியபடி மசூதி முன், ராமஜெயம் கூறி,  மதக்கலவரத்தை தூண்டும் கோஷங்களை எழுப்பியுள்ளனர். எனினும் மசூதியில் இருந்தவர்களோ அப்பகுதியினரோ பதில் தாக்குதலில் ஈடுபடவில்லை. இதற்கு அவர்களுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். கையில் கடிதம் ஒன்றினை சுட்டிக்காட்டி, இந்த கோஷமிட்ட கும்பலில் ஆம் ஆத்மி தொண்டர்கள் இருவர் ஈடுபட்டுள்ளனர். இதனால் டெல்லி வாசிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினார். அதனை தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜவடேகர், ‘சூழ்நிலையை இன்னும் மோசமாக்க ஆம் ஆத்மி முயற்சிக்கிறது’ என்று குற்றஞ்சாட்டினார். ஆனால், இந்த குற்றச்சாட்டின ஆம் ஆத்மி மறுத்துள்ளது.  இதுபற்றி ஆம் ஆத்மி் நிர்வாகிகூறியதாவது: இது வேண்டுமென்றே தொடரப்பட்ட குற்றச்சாட்டு. மக்களை திசைத்திருப்பி, பாஜ ஆட்சியில் நடந்த உன்னவ் மற்றும் கத்வா குற்றங்களை மறைக்கவே, பாஜ இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ராம நவமி மற்றும் அனுமான் ஜெயந்தி விழா அன்று 250 அமைப்பு சார்பில் தலைநகரில் ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு டெல்லி போலீஸ் அனுமதி வழங்கியது. மத்திய பாஜவின்கீழ் தான் டெல்லி போலீஸ் இயங்குகிறது. இந்த கலவர செய்கையில் ஈடுபட்ட யாராக இருந்தாலும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கட்டும் என்று கூறியுள்ளனர்.

,

Advertisement