TODAY NEWS
Search

மத்திய நிதிபுலனாய்வு அறிக்கையில் அதிர்ச்சி பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ளநோட்டுகள் அதிகரிப்பு

,

புதுடெல்லி: கடந்த 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பிறகு வங்கிகளில், கள்ளநோட்டுகள் அதிகரித்துள்ளதாகவும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் 480 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை முடிவு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி இரவு ரூ.1,000 மற்றும் ரூ.500 ஆகிய உயர்மதிப்பு நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்த செயல்பாட்டின் மூலம் பெருமளவு கருப்புப் பணம் மற்றும் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கள்ளநோட்டுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் அதிகமாக நடக்க வழிகோலியதாக அறிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் நிதி புலனாய்வு பிரிவு கடந்த 2016-17 ஆண்டில் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தது. இதில் வங்கி மற்றும் மற்ற நிதித்துறைகளில் 3.22 லட்சம் கள்ளநோட்டு பரிவர்த்தனைகள் நடைபெற்றதாக அறிக்ைக தெரிவித்துள்ளது. அந்த அறிக்ைகயில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது : கடந்த 2016-2017 ஆண்டில், பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மற்றும் பல்வேறு நிதித்துறை நிறுவனங்களில் 400 சதவிகிதத்திற்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.கடந்த 2015-16ல் கள்ளநோட்டு பரிவர்த்தனைகள் 4.10 லட்சமாக இருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த 2016-17ம் ஆண்டில் 7.33 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் முக்கிய காரணம். கடந்த 2015-16ல் சந்தேகத்திற்கிடமான பண பரிவர்த்தனைகள் 1.05 லட்சமாக இருந்த நிலையில், 2016-17ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 3,61,215 பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் மூலம் தீவிரவாதத்திற்கு நிதிஉதவி அளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

,

Advertisement