மலேசிய மணல் தரம் 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

,

புதுடெல்லி : மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மணலை லாரிகளில் எடுத்துச்சென்று தமிழகம் முழுவதும் விற்க அனுமதிக்க கோரி புதுக்கோட்டையை சேர்ந்த ராமையா நிறுவனம்  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக்குப்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்தகி,” மலேசிய மணல் விவகாரத்தில் அதனை கெமிக்கல் பரிசோதனை நடத்த வேண்டும் என்பதால் அறிக்கை தாக்கல் செய்ய எங்களுக்கு கூடுதலாக 2 வாரம் கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து  தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் 55ஆயிரம் டன் மணலிற்கு துறைமுக வாடையாக தமிழக அரசு சுமார் ரூ.4 லட்சத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இதுகுறித்து கெமிக்கல் ஆய்வு நடத்தி அறிக்கையை மூன்று வாரத்திற்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

,

Advertisement