TODAY NEWS
Search

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பை கைவிட வேண்டும் : ஏபிவிபி ேகாரிக்கை

,

புதுடெல்லி  : மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு விடைத்தாள்கள்  திருத்தும் பணி புறக்கணிப்பை உடனடியாக கைவிட வேண்டும் என டெல்லி பல்கலைக் கழக  ஆசிரியர்கள் சங்கத்துக்கு பாஜவின் மாணவரணியான ஏபிவிபி கோரிக்கை  விடுத்துள்ளது. ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடந்த ஒரு மாதமாக விடைத் தாள்கள் திருத்தும் பணியை புறக்கணித்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்எஸ்எஸின் கீழ் செயல்படும் பல்வேறு மாணவர் அமைப்புகளை  சேர்ந்தவர்கள்  பிரஸ் கிளப் ஆப் இந்தியா (பிசிஐ) அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிசிஐயில் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின்  கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஆசிரியர்களின் சில கோரிக்கைகள் நியாயமானவை. இதை நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்கால நலனை பாதிக்கும் வகையிலான போராட்டங்களில் அவர்கள் ஈடுபடுவது நலம் பயக்காது. எனவே இதை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும். தேர்வு முடிவுகள் தள்ளி போனால், முதுநிலை படிப்பை அவர்களால் மற்ற பல்கலைக்கழகங்களில் தொடர முடியாது என்றார். விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் படிப்பை தொடர வேண்டும். முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும.்  வெளிநாட்டு பலக்கலைக்கழகங்களிலும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த நெருக்கடியை,காலத்தின் கட்டாயத்தை மனதில் கொண்டு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பை கைவிட வேண்டும். ஆசிரியர்கள்தான் மாணவர்களை எதிர் கால சமுதாயத்துக்காக உருவாக்கும் அரும் பணியை செய்துவருபவர்கள்.  இதை அவர்கள் உணரவில்லை என்றால் மாணவர்களுக்கு சொல்லொண்ணா பாதிப்பும் இழப்பும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

,

Advertisement