TODAY NEWS
Search

மின்வாரிய ஊழியருக்கு கேரள லாட்டரியில் 3 ஆண்டும் முதல் பரிசு: ₹2.05 கோடி கிடைத்தது

,

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நபருக்கு அடுத்தடுத்து 3 ஆண்டுகளில் 3 முறை லாட்டரியில் முதல் பரிசாக மொத்தம் ₹2.05 கோடி கிடைத்துள்ளது.  கேரள மாநிலம், ஆலப்புழா அருகே அம்பலபுழா பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (62). இவர் கேரள மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். லாட்டரி டிக்கெட் வாங்குவது இவருடைய வழக்கம். கடந்த 2016ம் ஆண்டு இவர் வாங்கிய கேரள அரசின் பவுர்ணமி லாட்டரியில் முதல் பரிசு ₹65 லட்சம் கிடைத்தது. அடுத்த வருடம் 2017 நவம்பர் மாதம் கேரள அரசின் நிர்மல் லாட்டரியில் மீண்டும் இவருக்கு முதல் பரிசு ₹70 லட்சம் கிடைத்தது. லாட்டரியில் பரிசு விழுந்து கோடீஸ்வரன் ஆன பிறகும் லாட்டரி வாங்குவதை இவர் நிறுத்தவில்லை.இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இவர், கேரள அரசின் நிர்மல் லாட்டரி டிக்கெட்டை வாங்கினார். இதற்கான குலுக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், முதல் பரிசு ₹70 லட்சமும் மனோகரனுக்கு கிடைத்தது. அடுத்தடுத்த வருடங்களில் 3 முறை லாட்டரியில் ஒரே நபருக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மனோகரனுக்கு வனஜா என்ற மனைவியும். சஜித் என்ற மகனும், லெட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

,

Advertisement