TODAY NEWS
Search
Dkn_Daily_News_June_2018__4262920618058

முதல் டெஸ்டில் இலங்கை ஏமாற்றம் 226 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

போர்ட் ஆப் ஸ்பெயின்: இலங்கை அணியுடன் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 226 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 414 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் ஆல் அவுட்டானது. 229 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன் குவித்து மீண்டும் டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, 453 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, பரபரப்பான கடைசி நாள் ஆட்டத்தில் 226 ரன்னுக்கு சுருண்டது. தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் அதிகபட்சமாக 102 ரன் விளாசி ஆட்டமிழந்தார். ஏஞ்சலோ மேத்யூஸ் 31, கேப்டன் சண்டிமால் 27, டிக்வெல்லா 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் பெவிலியன் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் 8.2 ஓவரில் 1 மெய்டன் உட்பட 15 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். பிஷூ 3, கேப்ரியல் 2, ஹோல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணி 226 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 125 ரன் விளாசிய டோரிச் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் கிராஸ் ஐலெட் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

முதல் டெஸ்டில் இலங்கை ஏமாற்றம் 226 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410551http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |12 Jun 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *