TODAY NEWS
Search
Dkn_Daily_News_2018_8513866662980

மொனாகோவை 7-1 கோல் கணக்கில் வீழ்த்தி லீக்-1 சாம்பியன் ஆனது பிஎஸ்ஜி

பாரீஸ்: மொனாகோவை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிஎஸ்ஜி) அணி லீக்-1 சாம்பியன் கோப்பை வெல்வதை உறுதி செய்தது. பிரான்சின் பிரபல கால்பந்து தொடரான லீக்-1 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான மொனாகோவிற்கும், முன்னணி அணியான பிஎஸ்ஜிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பரபரப்பான ஆட்டம் பாரீசில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பிஎஸ்ஜி அணியின் செல்சோ  15, 27வது நிமிடத்திலும் டி மரியா 19, 58வது நிமிடத்திலும் தலா 2 கோல் அடித்து அசத்தினர். 17வது நிமிடத்தில் கவானியும், 86வது நிமிடத்தில் டிராக்லெரும் கோல் அடித்தனர். பால்காயோ 76வது நிமிடத்தில் ஓன்கோல் போட்டார். மொனாகோ தரப்பில் லோபெஸ் 38வது நிமிடத்தில் ஒரே ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் பிஎஸ்ஜி 7-1 என கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, லீக்-1 சாம்பியன் பட்டம் வெல்வதை உறுதி செய்தது. பிஎஸ்ஜி அணி 33 போட்டியில் 28 வெற்றி, 3 டிரா, 2 தோல்வியுடன் 87 புள்ளிகள் பெற்றுள்ளது. மொனாகோ 33 போட்டியில் 21 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 70 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ளன. ஐந்திலும் பிஎஸ்ஜி தோற்றாலும் 87 புள்ளிகள் பெற்றிருக்கும். மொனாகோ 5 போட்டியில் வெற்றி பெற்றாலும் 85 புள்ளிகள்தான் பெறும். இதனால் பிஎஸ்ஜி அணி லீக்-1 சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துள்ளது.

மொனாகோவை 7-1 கோல் கணக்கில் வீழ்த்தி லீக்-1 சாம்பியன் ஆனது பிஎஸ்ஜிhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=394076http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |17 Apr 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *