ரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்

ரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன்கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை விஸ்வரூபம் தயாரான 2013-ம் ஆண்டிலேயே படமாக்கி விட்டனர். முதல் பாகத்துக்கு எதிர்ப்பு கிளம்பி வெளிமாநிலங்களிலும் தமிழ் நாட்டிலும் வெவ்வேறு தேதிகளில் வெளியானதால் இரண்டாம் பாகம் பட வேலைகள் முடங்கின. சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனாலும் நிதி நெருக்கடியால் மீண்டும் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பு பொறுப்பை கமல்ஹாசனே ஏற்று இறுதி கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்தார். தற்போது இந்த படத்துக்கான ரீரிக்கார்டிங், டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. விஸ்வரூபம்-2 படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
The post ரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் வெளியாகாமல் பல வருடங்களாக தாமதமாகி வருவது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்தின் பெரும்பகுதி காட்சிகளை விஸ்வரூபம் தயாரான 2013-ம் ஆண்டிலேயே படமாக்கி விட்டனர். முதல் பாகத்துக்கு எதிர்ப்பு கிளம்பி வெளிமாநிலங்களிலும் தமிழ் நாட்டிலும் வெவ்வேறு தேதிகளில் வெளியானதால் இரண்டாம் பாகம் பட வேலைகள் முடங்கின. சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. ஆனாலும் நிதி நெருக்கடியால் மீண்டும் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பு பொறுப்பை கமல்ஹாசனே ஏற்று இறுதி கட்ட படப்பிடிப்புகளை நடத்தி முடித்தார். தற்போது இந்த படத்துக்கான ரீரிக்கார்டிங், டப்பிங் பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் நடந்து வருகிறது. விஸ்வரூபம்-2 படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ஏப்ரல் மாதம் படத்தை திரைக்கு கொண்டு வர முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post ரஜினியின் காலாவுக்கு போட்டியாக விஸ்வரூபம்-2 படத்தை களமிறக்கும் கமல்ஹாசன் appeared first on தமிழில் சினிமா செய்திகள்.

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *