TODAY NEWS
Search

ராஜ்பவனில் கெஜ்ரிவால் தர்ணா ஜனநாயகத்தை கேலிகூத்தாக்குவதா? மனோஜ் திவாரி கடும் விமர்சனம்

,

புதுடில்லி : கெஜ்ரிவால் தனது அமைச்சரவை சகாக்களுடன் துணை நிலை ஆளுநரின் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபவது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயல்” என பாஜ மாநில தலைவர் மனோஜ் திவாரி கூறியுள்ளார். முதல்வர் கெஜ்ரிவால் சில கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தனது அமைச்சரவை சகாக்களுடன் ஆளுநர் அனில் பைஜால் அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, டெல்லி மாநில அரசை முடக்கும் வகையில், அரசுக்கு எதிராக கடந்த 4 மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் அதிகாரிகளின் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் மீது நடவடிககை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை கெஜ்ரிவால் வலியுறுத்தி இந்த தர்ணாவை நடத்தி வருகிறார். அவருடன் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியிலிருந்து துணை முதல்வர் சிசோடியா, அமைச்சர்கள் கோபால் ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோருடன் கெஜ்ரிவால் அனில் பைஜாலை நேற்று முன்தினம் மாலை 5.30  மணியளவில் சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து அங்கேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். கெஜ்ரிவால் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மேற்கொண்ட இந்த தர்ணா போராட்டம் குறித்து மாநிலபாஜ தலைவர் மனோஜ் திவாரி ட்விட் செய்துள்ளார். அதில்,  “ஜனநாயகத்தை கேலி செய்தல், வேலை செய்யாமல் நாடகம் ஆடுவது மட்டும் தான் வேலையா?. எதிர்கட்சி தலைவர் விஜேந்தர் குப்தா சட்டமன்றத்தில் இருக்கிறார். அவர் கெஜ்ரிவாலை பணி செய்ய அழைக்கிறார்” என தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் குப்தா தெரிவிக்கையில், டெல்லியின்  மாலிக் (உரிமையாளர்) கெஜ்ரிவால் தனது சகாக்களுடன் குளிரூட்டப்பட்ட  அறையின் உள்ளே அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார். வெளியில் மக்கள்  தண்ணீருக்காக அவஸ்தைப்படுகின்றனர். இவர்கள் அரசியலைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள், மக்களின் பிரச்சினைகளைப்  பற்றி கவலைப்படுவதில்லை,” என குப்தா குறிப்பிட்டுள்ளார். கவர்னர் அலுவலகத்தில் முதல்வர் கெஜ்ரிவால், தனது அமைச்சரவை சகாக்களுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக, அந்த பகுதியில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள், கட்சி தொண்டர்கள் குவிந்துள்ளனர். இதனால் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைத்து போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். காரணமின்றி போராடும் வரிசையில் அடுத்ததாக கவர்னர் அலுவலகத்தில் அமர்ந்துள்ளது பற்றி கவர்னர் அலுவலகம் கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

,

Advertisement