TODAY NEWS
Search

வாஜ்பாய் இன்னும் சில நாட்களில் முழுமையாக குணம் அடைவார்: எய்ம்ஸ் இயக்குனர் அறிவிப்பு

,

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்னும் சில நாட்களில் முழுமையாக குணம் அடைவார் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜூன் 11 முதல் அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.  இது குறித்து எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் கூறியதாவது: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அவர் முழுமையாக குணம் அடைவார்.  அவரை அனுமதித்த போது சிறுநீர் வெளியேறும் அளவு மிகவும் குறைவாக இருந்தது. எனவே, அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரது சிறுநீரக செயல்பாடு இயல்பாக உள்ளது. சிறுநீர் வெளியேறும் அளவு கிட்டத்தட்ட இயல்பு நிலையை எட்டியுள்ளது. அவரது சிறுநீர் தொற்று கட்டுப்பாடாக உள்ளது. இரத்த அழுத்தம், இதய இயக்கம் உள்ளிட்டவை இயல்பாக உள்ளன. அடுத்த சில நாட்களில் அவர் முழுமையாக குணம் அடைவார்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

,

Advertisement