Dkn_Daily_News_2018_7403331995011

விக்கெட் கீப்பிங்கில் டோனி சாதனை

விக்கெட் கீப்பிங்கில் 400 விக்கெட் மைல் கல்லை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை மகேந்திர சிங் டோனி படைத்துள்ளார். நேற்று முன்தினம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்த மைல்கல்லை டோனி எட்டியுள்ளார். இதுவரை இவர், 315 ஒருநாள் போட்டியில் விளையாடி தனது அபார விக்கெட் கீப்பிங் மூலம் 401 பேரை வெளியேற்றி உள்ளார். இதில், 295 கேட்ச், 106 ஸ்டம்பிங் அடங்கும். சர்வதேச அளவில் அதிக விக்கெட் வீழ்த்திய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில், இலங்கையின் சங்கக்கரா (482 விக்கெட்) முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (472) 2வது இடத்திலும், தென் ஆப்ரிக்காவின் மார்க் பவுச்சர் (424) 3வது இடத்திலும் உள்ளனர். 4வது இடத்தில் டோனி உள்ளார்.

விக்கெட் கீப்பிங்கில் டோனி சாதனைhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=374300http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |09 Feb 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *