TODAY NEWS
Search

விமானத்தில் ரூ2.6 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

,

மும்பை: மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்றின் இருக்கைகளுக்கு அடியில் மறைத்து  வைக்கப்பட்டிருந்த ₹2.6 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.துபாயில் இருந்து நேற்று விமானம் ஒன்று மும்பை வந்தது. விமான நிலைய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விமானத்தை சோதனை  செய்தபோது இரு இருக்கைகளின் கீழ் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்து அவற்றை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.2.6 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தங்க கடத்தலில் தொடர்புள்ளவர்கள் பற்றியும் அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இரு சம்பவங்களில் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளை கடத்த முயன்ற இரண்டு பேர் மும்பை விமான நிலையத்தில் கைது  செய்யப்பட்டனர்.

,

Advertisement