TODAY NEWS
Search
Dkn_Daily_News_2018_8525310754777

வெறுங்கையுடன் திரும்பிய ஹாக்கி அணி

ஹாக்கியில் ஆண்கள், மகளிர் இரு பிரிவிலும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறித் தவறி தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த நிலையில் வெண்கலமாவது ஜெயிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் மகளிர் பிரிவு வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் நேற்று இந்தியா, இங்கிலாந்தை எதிர்த்து விளையாடியது. இதில் நமது அணி 0-6 என்ற கோல் கணக்கில் படுதோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. இதே போல் ஆண்கள் பிரிவில் வெண்கலப்பதக்கத்திற்கா போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இதன் மூலம், தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்தியா பதக்கமே இல்லாமல் வெறுங்கையுடன் வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

வெறுங்கையுடன் திரும்பிய ஹாக்கி அணிhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=393565http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |15 Apr 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *