வெற்றி தொடரும்: அமித்ஷா

,

பா.ஜ தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடியுடன் டெல்லியில் உள்ள பா.ஜ தலைமையகத்தில் தொண்டர்களிடம் பேசுகையில் கூறியதாவது: கர்நாடகாவில் எஸ்.சி., எஸ்.டி சட்டத்தை வைத்து மக்களிடையே ஜாதி பிரிவினை அரசியலை காங்கிரஸ் பயன்படுத்தியது. ஆனால், பிரதமர் மோடியின் சுத்தமான நிர்வாகத்தின் மீது கர்நாடக மக்கள் நம்பிக்கை வைத்து பிரிவினைவாத அரசியல் நடத்திய காங்கிரஸ் கட்சியை நிராகரித்துள்ளனர். பண பலம் மற்றும் அதிகார பலத்தையும் காங்கிரஸ் பயன்படுத்தியது. அவற்றையும் கர்நாடக மக்கள் நிராகரித்துள்ளனர். பா.ஜ.வின் இந்த வெற்றி 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.

,

Advertisement