TODAY NEWS
Search
Dkn_Daily_News_June_2018__8123089075089

மகளிர் ஆசிய கோப்பை டி20 பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்தியா : தொடர்ந்து 7வது முறையாக அசத்தல்'

கோலாலம்பூர் : மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரில், பாகிஸ்தானை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி தொடர்ந்து 7வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், தாய்லாந்து, மலேசியா ஆகிய 6 அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதின. நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை நேற்று எதிர்கொண்டது. கின்ராரா அகடமி ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில். டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் அணியால், 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 72 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடக்க வீராங்கனை நகிதா கான் 18, சனா மிர் 20*, டானா பெய்க் 6* ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகளை அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஏக்தா பிஷ்ட் 4 ஓவரில் 14 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஷிகா, அனுஜா, பூனம், தீப்தி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு, மித்தாலி ராஜ் மற்றும் தீப்தி ஷர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி தொடக்கத்தை கொடுத்தனர். எனினும், ஸ்மிரிதி மந்தனா – கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் ஜோடி 3வது விக்கெட்டுக்கு உறுதியுடன் விளையாடி 65 ரன் சேர்த்தது. மந்தனா 38 ரன் (40 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 16.1 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்து வென்றது. ஹர்மான்பிரீத் 34 ரன் (49 பந்து, 3 பவுண்டரி), அனுஜா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஏக்தா பிஷ்ட் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். அனைத்து அணிகளும் தலா 5 லீக் ஆட்டங்களில் விளையாடி முடித்த நிலையில், முதல் 2 இடங்களைப் பிடித்த இந்தியா (8 புள்ளி) மற்றும் வங்கதேசம் (8 புள்ளி) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. பாகிஸ்தான் (6), இலங்கை (4), தாய்லாந்து (4), மலேசியா (0) வெளியேற்றப்பட்டன. இந்திய அணி தொடர்ந்து 7வது முறையாக பைனலுக்கு முன்னேறிய நிலையில், வங்கதேசம் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் பரபரப்பான பைனலில் இந்தியா – வங்கதேசம் மோதுகின்றன.

மகளிர் ஆசிய கோப்பை டி20 பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்தியா : தொடர்ந்து 7வது முறையாக அசத்தல்'http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=409951http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |10 Jun 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *