200ஐ தாண்டியதும் இல்லை

போர்ட் எலிசபத்தில் விளையாடிய 5 ஒருநாள் போட்டியிலும் தோற்றுள்ள இந்திய அணி, இங்கு இதுவரை 200 ரன்னை தாண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2001 அக்டோபர் 17ம் தேதி கென்யாவுடன் மோதிய இந்திய அணி 50 ஓவரில் 247 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துரத்தலை தொடங்கியது. ஆனால், சவுரவ் கங்குலி தலைமையிலான அணி அந்த போட்டியில் 46.4 ஓவரில் 176 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹர்பஜன் சிங் அதிகபட்சமாக 37 ரன் எடுத்தார். ஜேக்கப் மார்டின் 36, கங்குலி 24, சோதி 21, தாஸ்குப்தா 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் நடையை கட்டினர். நம்பிக்கை நட்சத்திரங்கள் சச்சின் 3 ரன்னிலும், டிராவிட் 11 ரன்னிலும் வெளியேறிய நிலையில், அதிரடி ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

200ஐ தாண்டியதும் இல்லைhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375426http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |13 Feb 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

AdvertisementLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *