TODAY NEWS
Search

2019 நாடாளுமன்ற தேர்தலில் அகிலேஷ், முலாயம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

,

லக்னோ: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ், அவரது தந்தை முலாயம் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 73 இடங்களை பா.ஜனதா அணி கைப்பற்றியது. அதை தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலிலும் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்றார். பா.ஜனதாவின் இந்த வெற்றியால் சமாஜ்வாடி மற்றும் பகுஜன்ச மாஜ் கட்சிகள் அதிர்ச்சி அடைந்தன. அதன்பின் நடந்த மக்களவை இடைத்தேர்தலில் இருகட்சிகளும் மறைமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதனால் முதல்வர் யோகியின் சொந்த தொகுதியான கோரக்பூர் உள்பட 4 தொகுதிகளை பா.ஜனதா பறிகொடுத்தது. அதே போல் 2019ல் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.  2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை கட்சி தலைவர் அகிலேஷ் நேற்று லக்னோவில் வெளியிட்டார். அதன்படி கன்னோஜ் தொகுதியில் அகிலேஷூம், மெயின்புரி தொகுதியில் அவரது தந்தை முலாயம்சிங் யாதவும் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அகிலேஷ் கூறியதாவது:2019 நாடாளுமன்ற தேர்தலில் நான் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுகிறேன். நேதாஜி (முலாயம்) மெயின்புரி தொகுதியில் போட்டியிடுகிறார். சமாஜ்வாடி கட்சியை குடும்ப கட்சி என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. எனவே இந்த தேர்தலில் எனது மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட மாட்டார். பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும். அவர்களது தந்திரம் வெளிப்பட்டு விட்டதால் இந்த முறை மக்கள் அவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள். அவர்கள் வாய்வார்த்தை மூலம் தான் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். ஆனால், களத்தில் இறங்கி அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

,

Advertisement