Dkn_Daily_News_May_2018__9248424768448

3வது முறையாக குவித்தோவா சாம்பியன்

மாட்ரிட்:  ஸ்பெயினில் நடைபெறும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் நெதர்லாந்தின் கிகி பெர்டன்சுடன் (20வது ரேங்க்) மோதிய குவித்தோவா (10வது ரேங்க்), டை பிரேக்கர் வரை கடும் போராட்டமாக அமைந்த முதல் செட்டில் 7-6 (8-5) என வென்று முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் அதிரடியாக விளையாடி குவித்தோவாவின் சர்வீஸ் ஆட்டங்களை முறியடித்த கிகி பெர்டன்ஸ் 6-4 என வென்று சமநிலை ஏற்படுத்தினார்.எனினும், 3வது மற்றும் கடைசி செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி பெர்டன்சை திணறடித்த குவித்தோவா 7-6 (8-6), 4-6, 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கோப்பையை கைப்பற்றினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 52 நிமிடத்துக்கு நீடித்தது. மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமை குவித்தோவாவுக்கு கிடைத்துள்ளது. நடப்பு சீசனில் அவர் வென்ற 4வது டபுள்யு.டி.ஏ பட்டம் இது.

3வது முறையாக குவித்தோவா சாம்பியன்http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=401671http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |14 May 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *