Dkn_Daily_News_2018__1175958514214

4வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா

ஜோகன்னஸ்பர்க்: இந்திய அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. துவக்க வீரர் ரோகித் 5 ரன் மட்டுமே எடுத்து ரபாடா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் தவானுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். அபாரமாக விளையாடிய இருவரும் 2வது விக்கெட்டுக்கு 158 ரன் சேர்த்தனர். கோஹ்லி 75 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பொறுப்பாக விளையாடிய தவான்  தென் ஆப்ரிக்க மண்ணில் தனது முதல் சதத்தை விளாசி அசத்தினார். தவான் 109 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரகானே 8 ரன், ஷ்ரேயாஸ் 18, ஹர்திக் 9, புவனேஷ்வர் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன் குவித்தது. டோனி 42 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா, என்ஜிடி தலா 2, மார்கெல், மோரிஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 290 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய  தென் ஆப்ரிக்க துவக்க வீரர்கள் பொறுமையாக ரன் சேர்த்தனர். கேப்டன் மார்க்ராம் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் மோசமான வானிலை காரணமாக சிறுது நேரம் ஆட்டம் தடை பட்டது. இதனையடுத்து ஆட்டம் 28 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் துவங்கியது. டக்வர்த் லூயிஸ் முறைப்படி 202 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதிரடியாக விளையாடிய டி வில்லியர்ஸ் சகால் ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்து அசத்தினார். 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் மில்லர்-க்ளாஸென் ஜோடி அதிரடியாக விளையாடியது. மில்லர் 7 ரன் எடுத்திருந்த நிலையில் சகால் பந்தில் போல்டானார். அந்த பந்து நோ பால் ஆனதால் மில்லர் தப்பிப்பிழைத்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய அவர் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய பெலுக்வாயோ 5 பந்தில் 23 ரன்கள் எடுக்க தென் ஆப்ரிக்க அணி 15 பந்துகள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த தொடரில் தென் ஆப்ரிக்க அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி 3-1 என இத்தொடரில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்க தரப்பில் சிறப்பாக விளையாடி 43 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த க்ளாஸென் ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.

4வது ஒருநாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்ரிக்காhttp://www.dinakaran.com/News_Detail.asp?Nid=374936http://www.dinakaran.com/rss_news.asp?id=16Dinakaran.com |11 Feb 2018http://www.dinakaran.com/RSS/logo.jpgSports139

Advertisement



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *