9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியீடு

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.

பிளஸ்-2 தேர்வு

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர்.

Advertisement